ஜாமீன் மனு தள்ளுபடி - நடிகை சஞ்சனா கல்ராணி 5 நாள் காவலில் எடுத்து விசாரணை

0 1381
ஜாமீன் மனு தள்ளுபடி - நடிகை சஞ்சனா கல்ராணி 5 நாள் காவலில் எடுத்து விசாரணை

பெங்களூருவில் கைது செய்யப்பட்ட நடிகை சஞ்சனா கல்ராணியை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 5 நாள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

போதைப்பொருள் விநியோக கும்பலுடன் தொடர்பு இருப்பதாகக் கைது செய்யப்பட்ட நடிகை ராகினி திவேதியைத் தொடர்ந்து சஞ்சனா கல்ராணிக்கும் அதில் தொடர்பு இருப்பதாக புகார் எழுந்தது.

இதனையடுத்து அவரது வீட்டில் சோதனை மேற்கொண்ட பெங்களூரு மத்தியக் குற்றப்பிரிவு போலீசார், அவரை கைது செய்தனர்.

ஜாமீன் கோரி சஞ்சனா கல்ராணி தாக்கல் செய்த மனுவும் ரத்து செய்யப்பட்ட நிலையில், அவரை காவலில் எடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments