புதிய கல்விக் கொள்கை குறித்து ஆராய குழு அமைத்து தமிழக அரசு நடவடிக்கை

0 1798
புதிய கல்விக் கொள்கை குறித்து ஆராய குழு அமைத்து தமிழக அரசு நடவடிக்கை

தேசிய கல்விக் கொள்கையை பள்ளிக் கல்வித்துறையில் அமல்படுத்துவது குறித்து ஆராய்ந்து அரசுக்கு அறிக்கை தருவதற்கு பள்ளிக் கல்வித்துறை செயலாளர் தீரஜ் குமார் தலைமையில் 14 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.

தமிழ்நாட்டில் தொடர்ந்து செயல்படுத்தப்பட உள்ள இருமொழிக் கொள்கைக்கு பாதிப்பில்லாத வகையில், அரசின் கொள்கைகளுக்கு ஏற்ப தேசிய கல்விக் கொள்கையின் அம்சங்களை ஆராய்ந்து, எதை நடைமுறைப்படுத்தலாம்? எப்போது நடைமுறைப்படுத்தலாம்? என்பது போன்ற பரிந்துரைகளை 14 பேர் அடங்கிய வல்லுநர் குழு, ஒரு வருட காலத்துக்குள் வழங்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

வல்லுநர் குழுவுக்குத் தேவையான ஆலோசனைகள், வழிகாட்டுதல்களை பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் வழங்குவார் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments