சாத்தான்குளம் போலீசார் தாக்கியதில் இளைஞர் மாரடைப்பால் மரணம்? - சிபிசிஐடி

0 1934
சாத்தான்குளம் போலீசார் தாக்கியதில் இளைஞர் மாரடைப்பால் மரணம்? - சிபிசிஐடி

சட்டவிரோத காவலில் வைத்து சாத்தான்குளம் போலீசார் தாக்கியதால் உயிரிழந்ததாக கூறப்பட்ட இளைஞர் மகேந்திரன் மாரடைப்பால் இறந்ததாக மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சிபிசிஐடி தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக  மகேந்திரனின் தாயார் தொடர்ந்த வழக்கு நீதிபதி பொங்கியப்பன் முன்பு விசாரணைக்கு வந்த போது, சிபிசிஐடி தரப்பில் சீலிட்ட கவரில் தாக்கல் செய்யப்பட்ட நிலை அறிக்கையில், இளைஞர் மகேந்திரன் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இருப்பினும் மகேந்திரனை சட்டவிரோத காவலில் வைத்ததற்காக சம்பந்தப்பட்ட போலீசார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என அரசு தரப்பில் கூறப்பட்டது. இதனையேற்ற நீதிபதி வழக்கை செப்டம்பர் 21-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments