பப்ஜி செயலி முடக்கியதன் எதிரொலி, சீனாவின் டென்சென்ட்டுடனான இந்திய உரிமையை ரத்து செய்தது பப்ஜி

0 2600
நாட்டில் பப்ஜி செயலியை மத்திய அரசு முடக்கியிருக்கும் நிலையில், இந்தியாவில் சீன நிறுவனம் டென்சென்ட்டுடன் கொண்டிருக்கும் அனைத்து தொழில்முறை உறவுகளையும் ரத்து செய்வதாக பப்ஜி நிறுவனம் அறிவித்துள்ளது.

நாட்டில் பப்ஜி செயலியை மத்திய அரசு முடக்கியிருக்கும் நிலையில், இந்தியாவில் சீன நிறுவனம் டென்சென்ட்டுடன் கொண்டிருக்கும் அனைத்து தொழில்முறை உறவுகளையும் ரத்து செய்வதாக பப்ஜி நிறுவனம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்திய அரசின் நடவடிக்கைகளுக்கு மதிப்பளித்து, சீனாவின் டென்சென்ட் கேம்ஸ் நிறுவனத்தால் பப்ஜி செயலி இனி கட்டுப்படுத்தப்படாது என்றும் துணை நிறுவனங்களின் முழு பொறுப்பையும் பப்ஜி கார்பரேஷனே ஏற்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசுடன் இணைந்து செயல்பட்டு, சட்ட விதிகளுக்கும் ஒழுங்குமுறைகளுக்கும் உட்பட்டு கேமர்கள் மீண்டும் ஆன்லைன் களத்தில் விளையாடுவதற்கு தேவையான தீர்வை எட்டுவோம் என்றும் தென்கொரிய நிறுவனமான பப்ஜி தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments