மணல் கடத்தலை தடுக்க எத்தனை உத்தரவு பிறப்பித்தாலும் அதிகாரிகள் மதிப்பதில்லை : நீதிபதிகள் அதிருப்தி

0 891

மணல் கடத்தலை தடுக்க எத்தனை உத்தரவுகள் பிறப்பித்தாலும் அரசு அதிகாரிகள் அதனை மதிப்பதில்லை என அதிருப்தி தெரிவித்துள்ள உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள், அந்தந்த பகுதி வருவாய் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு தெரியாமல் மணல் கடத்தல் நடக்க வாய்ப்பில்லை என கருத்து தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான வழக்கில், சட்டவிரோத மணல் கடத்தலை தடுக்க வழக்கறிஞர் ஆணையரை நியமித்து, மணல் கடத்தலுக்கு துணை போகும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரப்பட்டிருந்தது.

இதனை விசாரித்த நீதிபதிகள், நெல்லை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட எஸ்.பி. காணொலி வாயிலாக ஆஜராகி விளக்கம் அளிக்கவும், மணல் கடத்தலை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தனித்தனியே பதில்மனுக்களை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை செப்டம்பர் 24ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments