பெலாரசில் எதிர்க்கட்சி பெண் தலைவரை முகமூடியணிந்த மர்மநபர்கள் கடத்தி சென்றதாக தகவல்

0 536
பெலாரசில் எதிர்க்கட்சி பெண் தலைவரை முகமூடியணிந்த மர்மநபர்கள் கடத்தி சென்றதாக தகவல்

பெலாரஸ் தலைநகர் மின்ஸ்கில் எதிர்க்கட்சி பெண் தலைவரை முகமூடியணிந்த மர்மநபர்கள் வேனில் கடத்திச் சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது.

எதிர்க்கட்சி ஒருங்கிணைப்புக் குழுவின் உறுப்பினரான மரியா கோல்ஸ்னிகோவா, கடந்த மாதம் 9 ஆம் தேதி நடந்த அதிபர் தேர்தலில் அலெக்சாண்டர் லுகாஷென்கோவை எதிர்த்து போட்டியிட்டார்.

அதில், 6வது முறையாக வெற்றி பெற்ற லுகாஷென்கோ, தேர்தலில் மோசடி செய்ததாக கோல்ஸ்னிகோவா தொடர்ந்து குற்றஞ்சாட்டி வந்தார்.

மேலும் இது தொடர்பான போராட்டங்களிலுக்கு தலைமை தாங்கி வந்த நிலையில், மர்மநபர்கள் அவரை கருப்பு நிற வேனில் ஏற்றி சென்றாகவும், பின்னர் அவரது இரு கூட்டாளிகளும் காணாமல் போனதாகவும் எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments