அமெரிக்க ஓபன் டென்னிஸ் காலிறுதிச் சுற்றில் நுழைந்தார் செரினா வில்லியம்ஸ்...

0 836
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி - காலிறுதிச் சுற்றுக்கு நுழைந்தார் செரினா வில்லியம்ஸ்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதிச் சுற்றுக்கு செரினா வில்லியம்ஸ் தகுதி பெற்றார்.

நேற்று நடைபெற்ற நான்காவது சுற்றுப் போட்டியில் கிரீஸ் வீராங்கனை மரியா சக்கரியை அவர் எதிர்கொண்டார். இரண்டரை மணி நேரம் நடைபெற்ற விறுவிறுப்பான போட்டியின் இரண்டாவது செட்டில் செரினாவுக்கு சக்கரி கடும் நெருக்கடி கொடுத்தார்.

இறுதியில் 6-3, 6-7, 6-3 என்ற செட் கணக்கில் செரினா வெற்றி பெற்றார்.

ஆடவர் பிரிவில், கனடா இளம் வீரரான ஃபெலிக்ஸ் ஓஜர் எலியாசிமை (Felix Auger-Aliassime ) சந்தித்த இரண்டாம் நிலை வீரர் டொமினிக் தீம் 7-6, 6-1, 6-1 என்ற செட் கணக்கில் எளிதான வெற்றியைத் தட்டிச் சென்றார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments