வீடியோ கேமில் தோற்கடித்ததால்.. 5ம் வகுப்பு மாணவியை கல்லால் அடித்துக் கொன்ற 6ம் வகுப்பு மாணவன்..!

0 4447
மத்தியப்பிரதேச மாநிலத்தில் வீடியோ கேமில் தொடர்ந்து தோற்கடித்ததால், 5ம் வகுப்பு மாணவியை 6ம் வகுப்பு மாணவன் அடித்துக் கொன்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மத்தியப்பிரதேச மாநிலத்தில் வீடியோ கேமில் தொடர்ந்து தோற்கடித்ததால், 5ம் வகுப்பு மாணவியை 6ம் வகுப்பு மாணவன் அடித்துக் கொன்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்தூர் பகுதியை சேர்ந்த சிறுமி கடைக்கு சென்று நீண்ட நேரமாக திரும்பாத நிலையில், குடியிருப்பு பகுதிக்கு அருகே படுகாயங்களுடன் இறந்து கிடந்துள்ளார். போலீசாரின் விசாரணையில், அந்த சிறுமியை அதே பகுதியை சேர்ந்த சிறுவனுடன் கடைசியாக பார்த்ததாக சிலர் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சிறுவனிடம் மேற்கொண்ட விசாரணையில், தாங்கள் இருவரும் நண்பர்கள் எனவும், செல்போனில் கேம் விளையாடியபோது சிறுமி தன்னை தொடர்ந்து தோற்கடித்ததாகவும் கூறியுள்ளான். இதுதொடர்பான வாக்குவாதத்தில் தனது செல்லப்பிராணியான எலியை சிறுமி கொன்றதால், ஆத்திரத்தில் சிறுமியை கல்லால் அடித்துக் கொன்றதாக சிறுவன் தெரிவித்துள்ளான்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments