சுஷாந்த் வழக்கில் நடிகை ரியாவை நாளையும் விசாரணைக்கு ஆஜராக போதைப் பொருள் தடுப்பு அதிகாரிகள் உத்தரவு

0 1116
பாலிவுட் நடிகர் சுஷாந்த் மரணம் தொடர்பான வழக்கில், 2வது நாளாக விசாரணைக்கு ஆஜரான நடிகை ரியா சக்ரபர்தியிடம் சுமார் 8 மணி நேரம் போதைப் பொருள் தடுப்பு துறையினர் விசாரணை நடத்தினர்.

பாலிவுட் நடிகர் சுஷாந்த் மரணம் தொடர்பான வழக்கில், 2வது நாளாக விசாரணைக்கு ஆஜரான நடிகை ரியா சக்ரபர்தியிடம் சுமார் 8 மணி நேரம் போதைப் பொருள் தடுப்பு துறையினர் விசாரணை நடத்தினர்.

சுஷாந்திற்கு தடை செய்யப்பட்ட போதைப் பொருள் வாங்கிக் கொடுத்ததாக கூறப்படுவது தொடர்பாக விசாரித்து வரும் அதிகாரிகள், ரியாவின் சகோதரர் ஷோவிக் உள்பட 3 பேரை ஏற்கனவே கைது செய்துள்ளனர்.

இந்த நிலையில் மும்பையில் உள்ள போதைப் பொருள் தடுப்பு அலுவலகத்தில் 2வது முறையாக ரியாவிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

நாளையும் விசாரணைக்கு ஆஜராக அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனிடையே போலியான மருத்துவ பரிந்துரைகளை சுஷாந்திற்கு வழங்கியிருப்பதாக, அவரது சகோதரி பிரியங்கா மற்றும் டெல்லி ராம் மனோகர் லோகியா மருத்துவமனை மருத்துவர் தருண் ஆகியோர் மீது நடிகை ரியா மும்பை போலீசில் புகார் அளித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments