ஒலியை விட வேகமாக செல்லும் ஹைபர்சானிக் ஏவுகணை.. இந்தியா அபார சாதனை!

0 10539

ஒலியை விட  வேகமாக  செல்லும் ஹைபர்சானிக் ரக ஏவுகணையை இந்தியா இன்று வெற்றிக்கரமாக சோதித்து பார்த்தது.

ஒடிஸாவில் பாலசோர் வீலர் தீவிலுள்ள அப்துல்கலாம் ஆய்வு மையத்தில் நடைபெற்ற இந்த சோதனை வெற்றி பெற்றதையடுத்து அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற நாடுகளையடுத்து ஹைபர்சானிக் ஏவுகணையை தயாரித்த நன்காவது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.

ஹைதராபாத்திலுள்ள டி.ஆர்.டி.ஓ. எனப்படும் மத்திய ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டுக் கழகம் இந்த ஏவுகணை வாகனத்தை தயாரித்துள்ளது. இன்று காலை 11.03 மணிக்கு அக்னி ஏவுகணைக்கு பயன்படுத்தப்படும் பூஸ்டரிலிருந்து ஹைபர்சானிக் ஏவுகணை ஏவப்பட்டது. 30 கிலோ மீட்டர் உயரத்துக்கு சென்ற பிறகு பூஸ்டரிலிருந்து பிரிந்து  ஸ்கீரிம்ஜெட் இன்ஜீன் மூலம் ஏவுகணை பறந்தது. 

இதன் மூலம் அடுத்த 5 ஆண்டுகளுக்குள்  விநாடிக்கு 2 கிலோ மீட்டர் அதிகமான  ஒலியை விட 6 மடங்கு வேகத்தில் செல்லக் கூடிய ஹைபர்சானிக் ஏவுகணையை தயாரிக்க இந்த தொழில்நுட்பம் உதவும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர். இந்த தொழில்நுட்பம் அமெரிக்கா, ரஷ்யா, சீ‘னா ஆகிய நாடுகளிடம் மட்டும்தான் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை இடைமறி ஏவுகணைகளை ஏவி தடுக்க முடியும். அல்லது ட்ராக் செய்து விட முடியும். ஆனால் ஹைபர்சானிக் ஏவுகணைகளை கண்டுபிடிப்பது மிக கடினமான விஷயம் இந்த ரக ஏவுகணைகளை ஏவி விட்டால் துல்லியமாக இலக்கை தாக்கி அழித்து விடும்.

தற்போது, சீனா போன்ற நாடுகள் இந்தியாவிடம் வாலாட்டி வருகின்றன. சீனா நம்மை தாக்கினால் இது போன்ற ஏவுகணைகளைக் கொண்டு அந்த நாட்டுக்கு அதிகபட்ச இழப்புகளை நம்மால் ஏற்படுத்த முடியும்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments