மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 8286 கன அடி வீதமாக குறைவு

0 626
மழை குறைவு மற்றும் , கர்நாடகத்தில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவும் குறைந்துள்ளதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது.

மழை குறைவு மற்றும் , கர்நாடகத்தில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவும் குறைந்துள்ளதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது.

இன்று காலை நிலவரப்படி கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 2400 கன அடி வீதமும், கபினி அணையில் இருந்து வினாடிக்கு 1700 கன அடி வீதமும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

இதனால் காவிரியில் தமிழகத்துக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. மேட்டூர் அணைக்கு நேற்று வினாடிக்கு 11 ஆயிரத்து 735 கன அடி வீதமாக இருந்த நீர்வரத்து இன்று காலை எட்டாயிரத்து 286 கன அடி வீதமாகக் குறைந்தது.

அணையின் நீர்மட்டம் 91 புள்ளி 3 அடியாகவும், நீர் இருப்பு 54 புள்ளி 2 டி.எம்.சி. ஆகவும் உள்ளது. அணையில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 6000 கன அடி வீதமும், கால்வாய்களில் 700 கன அடி வீதமும் நீரும் திறக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments