நடிகை கங்கணா ரணாவத்துக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்க உள்துறை அமைச்சகம் அனுமதி

0 1362
சிவசேனாவின் மிரட்டலுக்கு ஆளாகியுள்ள நடிகை கங்கணா ரனாவத்துக்கு பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிவசேனாவின் மிரட்டலுக்கு ஆளாகியுள்ள நடிகை கங்கணா ரனாவத்துக்கு பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுஷாந்த் மரண விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்த கங்கணா, மும்பை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல் இருப்பதாகவும், பாதுகாப்பற்ற நகரம் எனவும் விமர்சித்தார்.

இதற்கு சிவசேனா கட்சித் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.இதனிடையே வரும் 9 ஆம் தேதி மும்பை வரும் கங்கணாவுக்கு,ஒய் பிளஸ்  பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

உள்துறை அமைச்சர் அமித்ஷா தம்மை தொடர்பு கொண்டு பேசியதாகவும், அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் கங்கணா டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments