பிரதமரின் உதவித் தொகைத் திட்டத்தில் நடந்த ஊழல் குறித்து சிபிஐ விரைந்து நடவடிக்கை எடுக்க மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

0 1045
தமிழகத்தில் பிரதமர் பெயரிலான உழவர் உதவித் தொகைத் திட்டத்திலும், வீடு கட்டும் திட்டத்திலும் ஊழல் நடந்துள்ளதாக கூறப்படுவது குறித்து சிபிஐ விசாரணை நடத்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் பிரதமர் பெயரிலான உழவர் உதவித் தொகைத் திட்டத்திலும், வீடு கட்டும் திட்டத்திலும்  ஊழல் நடந்துள்ளதாக கூறப்படுவது குறித்து சிபிஐ விசாரணை நடத்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சேலம் மாவட்டத்தில் மட்டும் 10 ஆயிரத்து 700 பேரை, விவசாயிகள் எனப் போலியாகக் கணக்குக் காட்டி, 4 கோடி ரூபாய் மோசடி செய்திருப்பது தெரிய வந்ததால், அவர்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

முறைகேடுகள் தெரிய வந்ததால் கடலூர் மாவட்டத்தில்  4 கோடியே 20 லட்ச ரூபாயும், விழுப்புரம் மாவட்டத்தில் 4 கோடியே 50 லட்ச ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதையும் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்துக்கு ஒதுக்கப்படும் நிதியிலும் ஒவ்வொரு பயனாளிக்கும் ஒன்றே முக்கால் லட்ச ரூபாய் என்கிற வகையில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments