கர்நாடகத்தில் இருந்து காவிரியில் நொடிக்கு 4100 கன அடி நீர் திறப்பு

0 752
கர்நாடகத்தின் இரு அணைகளிலும் இருந்து காவிரியில் நொடிக்கு 4100 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கர்நாடகத்தின் இரு அணைகளிலும் இருந்து காவிரியில் நொடிக்கு 4100 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த மாதம் கனமழை பெய்ததால் கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகள் ஏற்கெனவே நிரம்பியுள்ளன. இன்று காலை நிலவரப்படி கிருஷ்ணராஜசாகர் அணைக்கு நீர்வரத்து 4200 கன அடியாக இருந்தது.

அணையில் இருந்து 2400 கன அடி நீர் காவிரியாற்றில் திறந்து விடப்படுகிறது. கபினி அணைக்கு நீர்வரத்து 2972 கன அடியாக இருந்தது. அணையில் இருந்து 1700 கன அடி நீர் ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.  இரு அணைகளிலும் இருந்து மொத்தம் 4100 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments