சென்னை உயர்நீதிமன்றம், மதுரைக் கிளையில் நேரடி விசாரணை தொடங்கியது

சென்னை உயர்நீதிமன்றத்திலும், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையிலும் இன்று முதல் நேரடி விசாரணை தொடங்கின.
சென்னை உயர்நீதிமன்றத்திலும், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையிலும் இன்று முதல் நேரடி விசாரணை தொடங்கின.
விசாரணைக்கு வரும் வழக்கறிஞர்கள் அங்கி அணிய தேவையில்லை. வெள்ளை நிற சட்டை மற்றும் கழுத்து பட்டை மட்டும் அணிந்து வர அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
முகக் கவசம், உடல்வெப்ப பரிசோதனை, நுழைவு வாயில்களில் ஹேண்ட் சானிட்டைசர் உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நீதிமன்றத்தினுள் இயங்கும் நூலகம், உணவகங்கள் செயல்படாது என தெரிவிக்கபட்டுள்ளது. காலையில் 3 அமர்வுகளும் பிற்பகலில் 3 அமர்வுகளும் விசாரணை நடத்துகின்றன. இதுதவிர பிற அமர்வுகள் காணொலி மூலம் நடைபெறுகின்றன.
Comments