வீட்டில் தனியாக இருந்த பெண் கழுத்து அறுத்து கொலை..!

0 5189

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண், ஆடைகள் இல்லாமல் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

விழுக்கம் கிராமத்தை சேர்ந்த கன்னியம்மாளின் கணவர் உடல்நலக் குறைவால் சென்னையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், மகள், மகன் சென்னையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இன்று காலை, விவசாயக் கூலி வேலைக்காக கன்னியம்மாளை அழைக்கச் சென்றவர்கள், ரத்த வெள்ளத்தில் அவர் நிர்வாண நிலையில் இறந்து கிடந்ததைக் கண்டு, போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். காவல் கண்காணிப்பாளர், துணை கண்காணிப்பாளர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். கன்னியம்மாள் உடலுக்கு அருகில் ஆண் அணியும் சட்டை, கொலை செய்யப் பயன்பட்ட கத்தி, மதுபாட்டில் கிடந்துள்ளது.

கன்னியம்மாள் இரவில் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும், பாலியல் பலாத்கார முயற்சியில் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர். விழுப்புரத்திலிருந்து வரவழைக்கப்பட்ட மோப்பநாய் சாய்னா, கத்தி, சட்டை, மது பாட்டில் மற்றும் உடலை மோப்பம் பிடித்த பிறகு, வீட்டின் பின்புறம் சென்றுள்ளது.

அதன் பிறகு திண்டிவனம்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை உள்ள கொணக்கம்பட்டு வரை சுமார் 4 கிலோ மீட்டருக்கு ஓடியுள்ளது. ஆட்கள் யாரையும் நாய் கவ்விப்பிடிக்கவில்லை. இதனிடையே, கைரேகை நிபுணர் டாக்டர் சண்முகம், சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments