கொலையே செய்தாலும் மும்பைக்குத் திரும்புவேன்-கங்கணா சவால்

0 2075

நடிகை கங்கணா ரணாவத் 9ம் தேதி மும்பை திரும்ப உள்ள நிலையில் புதிய வீடியோ வெளியிட்டுள்ளார்.

தற்போது சொந்த ஊரான மணாலியில் வசித்து வரும் நடிகை கங்கணா ராவத், 9ம் தேதி மும்பைக்குத் திரும்புவதாகவும் முடிந்தால் தடுத்து நிறுத்துங்கள் என்றும் சிவசேனா எம்பியான சஞ்சய் ராவத்துக்கு சவால் விடுத்துள்ளார்.

புதிய வீடியோவில் சிவசேனா ஆதரவாளர்கள் தனது பல்லை உடைக்கப்போவதாக மிரட்டல் விடுத்திருப்பதாகவும் தன்னைக் கொன்றாலும் பரவாயில்லை 9 ம் தேதி வந்து நேரில் சந்திக்கப் போவதாகவும் கங்கணா தெரிவித்துள்ளார்.

பாலிவுட்டில் 90 சதவீத பிரபலங்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகி உள்ளதாக கூறி பரபரப்பை ஏற்படுத்திய கங்கணா, மும்பை ஆக்ரமிப்பு காஷ்மீரைப் போல மாறி வருவதாக விமர்சித்திருந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்த சஞ்சய் ராவத் மும்பை வந்து பார் என சவால் விட மும்பை உங்கள் அப்பன் வீட்டு சொத்தல்ல என்று சஞ்சய் ராவத்துக்கு கங்கணா பதிலடி கொடுத்திருந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments