20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இங்கிலாந்து அணி வெற்றி...

0 1037
20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இங்கிலாந்து அணி வெற்றி...

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டீ-ட்வெண்டி போட்டியில், இங்கிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை கைப்பற்றியது.

சவுதாம்ப்டனில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. டேவிட் வார்னர் டக் அவுட் ஆக, அதிகபட்சமாக பின்ச் 40 ரன்களையும், ஸ்டாய்னிஸ் 35 ரன்களையும் சேர்த்தனர்.

20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 7 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, களமிறங்கிய இங்கிலாந்து அணி வீரர்கள் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர்.

ஜாஸ் பட்லர் 77 ரன்கள் மற்றும் டேவிட் மாலன் 42 ரன்கள் குவிக்க, 7 பந்துகள் மீதமிருந்த நிலையிலேயே இங்கிலாந்து அணி இலக்கை அடைந்தது.

இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை, 2-0 என இங்கிலாந்து கைப்பற்றியது. அந்த அணியின் ஜாஸ் பட்லர் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments