கலிபோர்னியாவில் மீண்டும் பற்றியெரியும் காட்டுத் தீ

0 693
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றியெரியும் காட்டுத் தீ

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் மீண்டும் 22 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பற்றியெரியும் காட்டுத் தீயால் அங்கு சுற்றுச்சூழல் பெரும் மாசடைந்துள்ளது.

சான் பெர்டினோ நகருக்கு அருகில் கொழுந்து விட்டெரியும் நெருப்பால் அங்கு 125 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது. இதனால் ஏற்பட்ட வெப்ப அலைகள் மாகாணம் முழுவதும் பரவி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தற்போது எரியும் காட்டுத் தீயால் கடந்த மாதம் ஏற்பட்டதை விட அதிகமாக வெப்பநிலை பதிவாக வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் எல்டொராடோ எனப்படும் பெரு நெப்பை அணைப்பதற்கு போதிய அளவு தீயணைப்பு வீரர்கள் இல்லாததால் நெருப்பைக் கட்டுப்படுத்துவதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments