கேரளாவில் பயங்கரம்: தங்கம் கடத்திய வாகனத்தை மடக்க முயன்ற அதிகாரிகள் மீது காரை மோதி தப்ப முயன்ற கடத்தல்காரர்கள்

0 4253

கேரள மாநிலம் மலப்புரம் அருகே தங்கம் கடத்திய வாகனத்தை தடுக்க முயன்ற வருவாய்த்துறை அதிகாரி மற்றும் அவருடைய கார் ஓட்டுனர் ஆகியோர் சென்ற வாகனம் மீது கடத்தல்காரர்கள் வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் இருவரும் காயம் அடைந்தனர்.

ஆயினும் விடாப்பிடியாக அந்த கடத்தல் வாகனத்தை விரட்டிச் சென்று மடக்கிய அதிகாரிகள் அதில் இருந்த 4 கிலோ 300 கிராம் எடையுள்ள தங்கத்தைப் பறிமுதல் செய்துள்ளனர். காரை ஓட்டி வந்தவர் கைது செய்யப்பட்டு அவருடைய வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கொச்சியில் கடத்தல் கும்பலின் செல்போன் உரையாடலை ஒட்டுக் கேட்ட சில அதிகாரிகள் காரிபுர் விமானநிலையத்திற்கு தங்கம் கடத்திச் செல்லப்படுவதாக தகவல் அளித்து உஷார்ப்படுத்தினர். இதையடுத்து வருவாய்த்துறை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டபோது கடத்தல்காரர்களின் வாகனம் அவர்கள் மீது மோதி காயப்படுத்தியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments