பூரண குணமடைந்த இளம்பெண்ணுக்கு மீண்டும் கொரோனா உறுதி.. பெங்களூருவில் முதல் மறுதொற்று..!

0 4607
கர்நாடக மாநிலத்தில், முதன்முறையாக, கொரோனாவால் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணுக்கு மீண்டும் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில், முதன்முறையாக, கொரோனாவால் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணுக்கு மீண்டும் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை மாதம் கொரோனாவால் பாதிக்கப் பட்டிருந்த 27 வயது இளம் பெண் ஒருவர் பூரண குணம் அடைந்து, வீடு திரும்பி இருந்தார். இந்த சூழலில், மீண்டும் கொரோனா பரிசோதனை செய்தபோது, வைரஸ் தொற்று உறுதி செய்யப் பட்டதாக பெங்களூரு FORTIS மருத்துவமனை தெரிவித்துள்ளது.

கொரோனாவில் இருந்து குணம் அடைவோர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என மருத்துவ உலகம் தெரிவிக்கும் நிலையில் பெங்களூரு இளம்பெண்ணுக்கு, நோய் எதிர்ப்பு சக்தி உருவாகவில்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

உலகின் முதல் கொரோனா மறு தொற்று, ஆகஸ்டு 24 - ல் ஹாங்காங்கில் கண்ட றியப்பட் டது. தெலங்கானாவில் 2 பேருக்கும், மும்பையில் மருத்துவர் ஒருவருக்கும் மீண்டும் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தது. இதுதவிர, அமெரிக்கா, நெதர்லாந்து மற்றும் பெல்ஜியம் நாடுகளிலும், கொரோனா மறு தொற்று சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments