ஜப்பானில் ஹைஷென் புயலால் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றம்

0 937
ஜப்பானில் ஹைஷென் புயலால் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றம்

ஜப்பானில் ஹைஷென் புயல் காரணமாக பல்வேறு இடங்களில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்ததுடன் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.

கொரிய தீபகற்பத்தில் அதிக பாதிப்பை ஏற்படுத்திய மேசக் புயலை தொடர்ந்து உருவாகி உள்ள ஹைஷென் புயலால் மணிக்கு 252 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் ஒகினாவா, ககோஷிமா, குமாமோடோ, நாகசாகி ஆகிய தென் மாகாணங்களில் உள்ள ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் இருந்து பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளதாக தீயணைப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், புயலால் அமாமி ஓஷிமா தீவில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளும், ஒகினாவாவில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளும் மின்சார வசதியை இழந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments