வழிதவறிச் சுற்றித் திரிந்த சீனர்களை காப்பாற்றி, உணவளித்து அனுப்பி வைத்த இந்திய வீரர்கள்..!

0 3400

சீனாவில் இருந்து வழிதவறி சிக்கிம் எல்லைக்குள் நுழைந்த 3 சீனர்களை இந்திய ராணுவத்தினர் காப்பாற்றி உள்ளனர். வடக்கு சிக்கிம் மலைப்பகுதியில் சுமார் 17 ஆயிரத்து 500 அடி உயரத்தில் சீனாவைச் சேர்ந்த இரு ஆண்களும் ஒரு பெண்ணும் சுற்றித் திரிந்தனர்.

அப்பகுதியில் வெப்பநிலை பூஜ்யம் டிகிரிக்கும் குறைவாக இருந்ததால் மூவரும் போதிய அளவு ஆக்ஸிஜன் கிடைக்காமல் மூச்சு விடுவதற்கு சிரமப்பட்டனர். இவர்களைக் கண்ட இந்திய ராணுவ வீரர்கள் மூவரையும் மீட்டு அவர்களுக்கு ஆக்ஸிஜனும், உணவும் கொடுத்து காப்பாற்றினர்.

விசாரணையில் சீனாவின் எல்லையோரத்தில் வசித்து வரும் அவர்கள் வழிதெரியாமல் வந்தது தெரியவந்தது. பின்னர் மருத்துவ உதவிக்குப் பின் அவர்கள் சரியான வழியில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments