டெல்லியில் கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது - அரவிந்த் கெஜ்ரிவால்

0 703

டெல்லியில் கொரோனா தொற்று கட்டுக்குள் இருப்பதாகவும் தொடர்ந்து அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாகவும் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளர்.

சோதனைகள் அதிகரித்துள்ளதால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக அவர் விளக்கம் அளித்துள்ளார். வைரஸ் தொற்றால் ஏற்படும் இறப்புகளைக் குறைக்க அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்று கூறிய கெஜ்ரிவால், கடந்த சில நாட்களாக தரவுகளை தாம் ஆய்வு செய்து கொரோனா பாதிப்பு குறித்து, மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தியதாக குறிப்பிட்டுள்ளார்.

டெல்லியில் நேற்று 2,ஆயிரத்து 914 புதிய கொரோனா பாதிப்புகள் மற்றும் 13 புதிய இறப்புகள் பதிவாகியுள்ளன. இறப்பு விகிதம் பூஜ்யம் புள்ளி 4 சதவீதமாக இருந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments