சுஷாந்த் சிங் மரண வழக்கில் அவரது வீட்டுப் பணியாளர் கைது.. நடிகை ரியாவும் கைதாவாரா ?

0 3415

பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் மரண வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஏற்கனவே நடிகை ரியாவின் சகோதரர் ஷோமிக் மற்றும் சுஷாந்தின் மேலாளர் மிராண்டா ஆகியோர் போதைப் பொருள் வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் நேற்று சுஷாந்தின் வீட்டுப் பணியாளர் தீபேஷ் சாவந்த்தை போதை தடுப்புப் பிரிவினர் கைது செய்தனர்.

போதைப் பொருள் விவகாரம் தொடர்பான விசாரணை மிகவும் தீவிரம் அடைந்துள்ள நிலையில், இன்று ரியா சக்ரபோர்த்தியை விசாரிக்கவும் போதைப் பொருள் தடுப்பு அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

விசாரணைக்குப் பின்னர் நடிகை ரியாவும் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. ரியாவின் சகோதரர் ஷோமிக் ரியாவின் கிரெடிட் கார்டை பயன்படுத்தி அவர் கூறியதால்தான், போதைப் பொருளை வாங்கியதாக விசாரணையில் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியானது. இதனால் ஷோமிக்கையும் ரியாவையும் ஒன்றாக வைத்து விசாரிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments