ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு சென்ற வாகனம் விபத்து, அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்

0 3888

ஆந்திரப்பிரதேச முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, வாகன விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

விஜயவாடா - ஹைதராபாத் தேசிய நெடுஞ்சாலையில் சந்திரபாபு நாயுடு காரில் சென்று கொண்டிருந்தார். அவரின் காருக்கு முன்பும், பின்பும் தேசிய பாதுகாப்புப் படையினர் அணிவகுத்து சென்றனர். அப்போது சாலையின் குறுக்கே பசு மாடு ஒன்று குறுக்கிட்டதால் தேசிய பாதுகாப்புப் படையினர் தங்களது வாகனத்தில் திடீரென பிரேக்கைப் பயன்படுத்தினர்.

இதில் அடுத்தடுத்து வந்த கார்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதின. இதில் 4வதாக வந்த சந்திரபாபு நாயுடுவின் காரும் விபத்துக்குள்ளானது. இதில் அவர் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த விபத்தில் நாயுடுவின் பாதுகாப்புக்காக வந்த 8 வாகனங்களும் சேதமடைமந்தன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments