அமைதி திரும்பாதவரை இந்தியா-சீனா சுமூக வர்த்தகத்துக்கு சாத்தியமில்லை... இந்திய வெளியுறவு அமைச்சக செயலாளர் திட்டவட்டம்

0 1556
அமைதி திரும்பாதவரை இந்தியா-சீனா சுமூக வர்த்தகத்துக்கு சாத்தியமில்லை

எல்லையில் அமைதி திரும்பாதவரை இந்தியா-சீனா இடையே சுமூக வர்த்தகத்துக்கு சாத்தியமில்லை என்று இந்திய வெளியுறவு அமைச்சக செயலாளர் ஹர்ஷ் வீ.சிறிங்கலா (Foreign Secretary Harsh V Shringla) தெரிவித்துள்ளார். 

பப்ஜி உள்ளிட்ட 118 சீன செயலிகளுக்கு இந்தியா தடை விதித்த நிலையில், காணொலி மூலம் நடைபெற்ற உலக விவகாரங்களுக்கான இந்திய கவுன்சில் நிகழ்ச்சியில் பேசிய அவர், 1962ம் ஆண்டுக்குபிறகு தற்போதுதான் சீனாவுடன் முதன்முறையாக மோதல் போக்கு நிலவுவதாகவும், கடந்த 40 ஆண்டுகளில் முதல்முறையாக இந்திய தரப்பில் வீரர்கள் உயிரிழந்திருப்பதாகவும் கூறினார். 

நாட்டின் இறையாண்மை, பிரதேச ஒருமைப்பாடு விவகாரத்தில் இந்தியா ஒருபோதும் சமரசம் செய்யாது என்றும், அதேநேரத்தில் பொறுப்புள்ள நாடு என்ற முறையில் இந்தியா பேச்சுவார்த்தைக்கு  எப்போதும் தயாராகவே உள்ளது என்றும் அவர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments