நாட்டைக் கட்டமைத்ததில் ஆசிரியர்களின் பங்களிப்புக்கு நன்றி பிரதமர் நரேந்திர மோடி ஆசிரியர் தின வாழ்த்து

0 466
நாட்டைக் கட்டமைக்கப் பங்காற்றியதற்காக ஆசிரியர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துச் செய்தி

நாட்டைக் கட்டமைத்ததில் ஆசிரியர்களின் பங்களிப்புக்கு நன்றி செலுத்துவதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

தத்துவ ஆசிரியரும் இந்தியக் குடியரசு முன்னாள் தலைவருமான டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாள் செப்டம்பர் 5ஆகும். அவரையும் ஆசிரியர்களையும் பெருமைப்படுத்தும் வகையில் 1962ஆம் ஆண்டு முதல் செப்டம்பர் 5ஆம் நாள் ஆசிரியர் நாளாகக் கொண்டாடப்படுகிறது.

இதையொட்டிப் பிரதமர் மோடி விடுத்துள்ள செய்தியில், குழந்தைகளின் அறிவை மேம்படுத்தவும், நாட்டைக் கட்டமைக்கவும் கடின உழைப்பால் பங்களித்த ஆசிரியர்களுக்கு நன்றியுடையவர்களாக இருப்போம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments