கடைசில அவரு போகல... இவரு கிளம்பிட்டாரு...யுவென்டஸில் இணைகிறார் லூயீஸ் சௌரஸ்!

0 1780

பார்சினோனாவின் நட்சத்திர வீரர் லயனல் மெஸ்ஸி அந்த அணியிலிருந்து விலகப் போவதாக கடந்த சில தினங்களாக செய்தி அடிப்பட்டுக் கொண்டிருந்தது. ஆனால், மெஸ்ஸியை இலவசமாக விடுவிக்க முடியாது ஒப்பந்தம் செய்யும் அணிகள் 6,000 கோடி தர வேண்டுமெனன பார்சிலோனா பிடிவாதம் பிடித்தது. இதனால், ஒப்பந்த காலம் முடியும் வரை, பார்சிலோனா அணிக்காகவே விளையாட மெஸ்ஸி முடிவு செய்துள்ளார்.

இந்த நிலையில், பார்சிலோனாவுக்காக விளையாடி வரும் உருகுவே ஸ்ட்ரைக்கர் லூயீஸ் சௌரஸ் இத்தாலியின் சீரி ஏ சாம்பியன் யுவென்டஸ் அணியில் இணைய முடிவு செய்துள்ளார். 2021 ஆம் ஆண்டு வரை பார்சிலோனா அணிக்காக சௌரஸ் விளையாட வேண்டும். ஒரு ஆண்டுக்கு முன்னரே விடுவிக்க வேண்டுமென்றால் ஒரு ஆண்டுக்கான சம்பளத்தை பார்சிலோனாவுக்கு வழங்க சௌரஸ் ஒப்புக் கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது. தெற்போது, யுவென்டஸ் அணிக்காகத்தான் போர்ச்சுகல் கேப்டன் ரொனல்டோ விளையாடி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் லிவர்பூல் அணியிலிருந்து பார்சிலோனாவில் லூயீஸ் சௌரஸ் இணைந்தார். பார்சிலோனாவுக்காக 283 ஆட்டங்களில் விளையாடி 198 கோல்களையும் அடித்துள்ளார். அர்ஜென்டினாவின் மெஸ்ஸி, பிரேசிலின் நெய்மர், உருகுவேயின் லூயீஸ் சௌரஸ் என ஒரு காலக்கட்டத்தில் பார்சிலோனாவின் முன்களம் அபாரமாக ஆடியது. யார் கண் பட்டதோ தெரியவில்லை ... வடிவேலு பாணியில் சொல்லனும்னா... அப்படியே சல்லி சல்லியா நொறுக்கிட்டாங்க...!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments