தமிழகத்தில் சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்குகிறது

0 2176
தமிழகத்தில் இயக்கப்பட உள்ள சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று முதல் நடைபெறுகிறது. ஏற்கனவே அறிவிக்கப்பட்டதுடன், கூடுதலாக 4 வழித்தடங்களில் முன்பதிவு செய்யப்பட்ட சிறப்பு ரயில்களை தமிழகத்தில் இயக்கப்பட உள்ளன.

அதன்படி, சென்னை எழும்பூர் - செங்கோட்டை இடையே வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. செங்கோட்டை - சென்னை எழும்பூர் இடையே வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

இதேபோல் சென்னை எழும்பூர் - கன்னியாகுமரி, சென்னை சென்ட்ரல் - மேட்டுப்பாளையம், திருச்சி - நாகர்கோவில் ஆகிய நகரங்களிடையே நாள்தோறும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. 

கொரோனா முன்னெச்சரிக்கையாக வெப்பநிலை அறியும் சோதனைக்காகப் பயணிகள் ஒன்றரை மணி நேரத்துக்கு முன் ரயில் நிலையத்துக்கு வந்துவிட வேண்டும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments