ஜம்மு காஷ்மீரில் பதுங்கியிருந்த 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

0 1174
ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினரின் வேட்டையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினரின் வேட்டையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

பாரமுல்லா மாவட்டம் பட்டான் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து பாதுகாப்புப் படையினர் அங்கு விரைந்தனர். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதை அடுத்து பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

காலை தொடங்கி மாலை வரை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில், 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்த மோதலில் ராணுவ அதிகாரி ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதனிடையே, புல்வாமா அருகே உள்ள பபூரா பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments