’ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 39 மட்டுமே’ - செப். 10 முதல் கேரளாவில் உற்பத்தியைத் தொடங்கும் ராமர்பிள்ளை!

0 123734
மூலிகை எரிபொருள் கண்டுபிடிப்பாளர் ராமர்பிள்ளை

செப்டம்பர் 10 - ம் தேதி முதல் மூலிகை பெட்ரோல், டீசல், எரிவாயு உற்பத்தியைத் தொடங்கவுள்ளதாக ராமர்பிள்ளை தெரிவித்துள்ளார். மேலும், தமிழகத்தில் ஒரு லிட்டர் மூலிகை பெட்ரோலை ரூ. 39 - க்கு  வழங்க முடியும் என்றும் கூறியுள்ளார்.

கழிவு நீர், விவசாயக் கழிவுகள் மற்றும் மூலிகைகளைக் கொண்டு பயோ டீசல், பயோ பெட்ரோல், பயோ சமையல் எரிவாயு ஆகியவற்றைத் தயாரித்துள்ளதாக ராமர்பிள்ளை இன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, 

“கேரளா அரசு மூணாறு பகுதியில் 1600 ஏக்கர் நிலத்தை ஒதுக்கீடு செய்து, மூலிகை பெட்ரோலை உற்பத்தியைத் தொடங்க அனுமதி அளித்துள்ளது. வரும் 10 - ம் தேதி முதல் மூலிகை பெட்ரோல் உற்பத்தியைத் தொடங்கவிருக்கிறோம். மூலிகை பெட்ரோல் குறித்து பலர் தவறான தகவலைப் பரப்பிவருகின்றனர். மூலிகை எரிபொருள் குறித்து என் மீது மத்திய புலனாய்வுத் துறை வழக்கு தொடுத்தது. என்னுடைய மூலிகை பெட்ரோலில் கெமிக்கல் எதுவும் கலக்கவில்லை என்பதை நீதிமன்றத்தில் நிரூபித்துள்ளேன். என் மீது தொடுக்கப்பட்ட வழக்கில் போதிய ஆதாரம் இல்லை என்று நீதிமன்றமே விடுவித்து விட்டது.

லடாக் பகுதியில் எரிபொருள் நிரப்புவதிலிருந்த பிரச்சனையைத் தீர்க்க இந்திய ராணுவம் என்னை அழைத்தது. அங்கு, சாதாரண டீசலை விடவும் பயோ டீசல் வீரியம் மிக்கது என்பதை ராணுவத்தினர் முன்னிலையிலேயே நிரூபித்துள்ளேன்.

கேரளாவில் 77 இடங்களில் மூலிகை பெட்ரோல் உற்பத்தியைத் தொடங்கவுள்ளோம். தமிழகத்தில் பயோ பெட்ரோல், பயோ டீசல் தயாரிப்பது குறித்து முதல்வரிடம் அனுமதி கேட்கவுள்ளோம். மூலிகை எரிபொருட்களைக் கேரளாவில் வரியுடன் சேர்த்து டீசல், பெட்ரோல் விலை ரூ. 39 க்கு கொடுப்போம்,  பயோ கேஸை 16 லிட்டர் ரூ 250 க்கு வழங்கவுள்ளோம். தமிழகத்தில் தயாரிக்கும் போது ஒரு லிட்டர் பெட்ரோலை 20 ரூபாய்க்கு விற்பனை செய்யவுள்ளோம்” என்று கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments