ஐபிஎஸ் அதிகாரிகள் மன அழுத்தம் இன்றி பணியாற்ற யோகா, மூச்சுப் பயிற்சி செய்வது நல்லது-பிரதமர் மோடி அறிவுரை

0 873
ஐபிஎஸ் அதிகாரிகள் மன அழுத்தம் இன்றி பணியாற்ற யோகாசனம், பிராணாயாமம் ஆகியவற்றைச் செய்வது நல்லது என இளம் அதிகாரிகளுடன் கலந்துரைடியாடிய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ஐபிஎஸ் அதிகாரிகள் மன அழுத்தம் இன்றி பணியாற்ற யோகாசனம், பிராணாயாமம் ஆகியவற்றைச் செய்வது நல்லது என இளம் அதிகாரிகளுடன் கலந்துரைடியாடிய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

இந்தியக் காவல் பணிக்குத் தேர்வு பெற்று ஐதராபாத் தேசியக் காவல் பயிற்சி மையத்தில் பயிற்சி முடித்த இளம் அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலியில் கலந்துரையாடினார்.

அப்போது  மனம் வைத்து எந்தப் பணியைச் செய்தாலும் அதன்மூலம் பயன் கிடைக்கும் என்றும், எவ்வளவு பணிச் சுமை இருந்தாலும் அழுத்தம் இருக்காது எனவும் குறிப்பிட்டார்.

கொரோனா சூழலில் காவல்துறையினர் சிறப்பாகப் பணியாற்றியதால், அவர்களின் முகம் மக்களின் மனங்களில் இடம்பிடித்துள்ளதாகத் தெரிவித்தார். காவல் அதிகாரிகள் புதிதாகப் பணியில் சேரும்போது, ரவுடிகள் உட்பட அனைவரும் தங்களுக்கு அஞ்ச வேண்டும் என நினைப்பதைக் குறிப்பிட்டார்.

சிங்கம் போன்ற திரைப்படங்களைப் பார்த்துத் ஐபிஎஸ் அதிகாரிகள் தங்களை மிகப் பெருமையாகக் கருதுவதால், உண்மையான பணியைச் செய்யாமல் போய்விடுவதாகவும், இத்தகைய போக்கைத் தவிர்க்க வேண்டும் எனவும் தெரிவித்தார். அப்போது தமிழகத்தைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி கிரண் ஸ்ருதியிடம் பேசிய மோடி, பொறியியல் படிப்பு படித்து விட்டுக் காவல் பணியை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள் எனக் கேட்டார்.

சீருடை அணிந்து மக்கள் பணி செய்யத் தனது பெற்றோர் விரும்பியதால் காவல்துறையைத் தேர்ந்தெடுத்ததாகக் கிரண் ஸ்ருதி தெரிவித்தார். கிரண்பேடி போல வரவேண்டும் என விரும்பியதால், தனக்கு கிரண்ஸ்ருதி எனப் பெற்றோர் பெயர் வைத்ததாகவும் அவர் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments