நடிகை ரியா வீட்டில் அதிகாலையில் போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை

0 2323
மும்பையில் நடிகை ரியா வீட்டில் சோதனையிட்ட போதை மருந்து தடுப்பு பிரிவினர், அவரது சகோதரர் மற்றும் சுசாந்த் வீட்டின் முன்னாள் ஹவுஸ்கீப்பிங் மேனேஜர் மிராண்டா ஆகியோரை கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

சாமுவேல் மிராண்டா என்ற அந்த நபர், கடந்த ஆண்டு மே மாதத்தில் சுசாந்த் வீட்டில் நடிகை ரியாவால் பணிக்கு நியமிக்கப்பட்டவர். சுசாந்திடமிருந்து ரியா பணத்தை கையாடல் செய்வதற்கும், போதை மருந்துகளை விநியோகிப்பதற்கும் மிராண்டா உதவியதாக சுசாந்த் குடும்பத்தினர் குற்றம்சாட்டி வந்தனர்.

இந்நிலையில், மிராண்டா வீட்டில் ரெய்டு நடத்திய போதை மருந்து தடுப்பு பிரிவினர், அவரை தடுப்புக் காவலில் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். இதேபோல, ரியா மற்றும் அவரது சகோதரர் Showik Chakraborty வீட்டிலும் போதைப் பொருள் தடுப்பு அதிகாரிகளும் மும்பை போலீசாரும் கூட்டாக இன்று அதிகாலை அதிரடி சோதனை நடத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments