கர்நாடகத்தில் இருந்து காவிரியில் தமிழகத்துக்கு நீர்வரத்து 23,000 கன அடியாக அதிகரிப்பு

0 763
கர்நாடகத்தில் இருந்து தமிழகத்துக்குக் காவிரி ஆற்றில் நீர்வரத்து 23 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.

கர்நாடகத்தில் இருந்து தமிழகத்துக்குக் காவிரி ஆற்றில் நீர்வரத்து 23 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.

கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்ததால் தமிழகத்துக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தமிழக எல்லையான பிலிக்குண்டுலுக்கு நேற்று மாலை 22 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 23 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.

மேட்டூர் அணைக்கு நேற்றுக் காலை 17 ஆயிரத்து 937 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 21 ஆயிரத்து 339 கன அடியாக அதிகரித்துள்ளது.

அணையின் நீர்மட்டம் 90 (கன) அடியாகவும், நீர் இருப்பு 53 டி.எம்.சியாகவும் உள்ளது. அணையில் இருந்து பாசனத்துக்குக் காவிரியாற்றில் ஒன்பதாயிரம் கன அடி நீரும், கிழக்கு மேற்கு கால்வாய்களில் 700 கன அடி நீரும் திறந்துவிடப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments