நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 83,341 பேருக்கு கொரோனா உறுதி

0 577
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 83,341 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 83,341 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

இதேபோல் ஆயிரத்து 96 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனால் நாட்டில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 39 லட்சத்து 36 ஆயிரத்து 748ஆகவும், பலியானோரின் எண்ணிக்கை 68 ஆயிரத்து 472ஆகவும் அதிகரித்துள்ளது.

8 லட்சத்து 31 ஆயிரத்து 124 பேர் சிகிச்சையில் உள்ள நிலையில், 30 லட்சத்து 37 ஆயிரத்து 152 பேர் குணமாகியுள்ளனர். 

நேற்று ஒரே நாளில் 11 லட்சத்து 69 ஆயிரத்து 765 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

இதையும் சேர்த்து, கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டோரின் எண்ணிக்கை நாட்டில் 4 கோடியே 66 லட்சத்தை தாண்டியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments