நடப்பாண்டு ஐபிஎல் தொடர் போட்டி அட்டவணை இன்று வெளியீடு - சவுரவ் கங்குலி

0 3110
நடப்பாண்டு ஐபிஎல் தொடர் போட்டி அட்டவணை இன்று வெளியிடப்படும் - சவுரவ் கங்குலி

நடப்பாண்டு ஐபிஎல் தொடருக்கான போட்டி அட்டவணை இன்று வெளியிடப்படும் என, பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

வருகிற 19-ந் தேதி முதல் நவம்பர் 10-ந் தேதி வரை  துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய இடங்களில் ஐ.பி.எல். தொடர் நடைபெற உள்ளது.

இதனிடையே, வீரர்கள் சிலருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் தொடருக்கான அட்டவணையை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது.

இந்த நிலையில், ஐபிஎல் தொடருக்கான முழு போட்டி அட்டவணை இன்று வெளியிடப்படும் என, சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, திட்டமிட்டபடி, முதல் போட்டி நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணிக்கும், சென்னை அணிக்கும் இடையே நடைபெறும் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments