நோவாவாக்ஸ் தடுப்பூசி 2ஆம் கட்டப் பரிசோதனை தொடக்கம்

0 801
நோவாவாக்ஸ் தடுப்பூசி 2ஆம் கட்டப் பரிசோதனை தொடக்கம்

கோவிட் 19 தடுப்பூசிக்கான இரண்டாம் கட்ட பரிசோதனைகளை நோவாவாக்ஸ் இன்க் Novavax Inc தொடங்கி அதற்குரிய தன்னார்வலர்கள் பெயரை பதிவு செய்து வருகிறது.

இந்த ஆண்டின் இறுதிக்குள் இதன் முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய பரிசோதனையில் 60 வயது முதல் 84 வயது வரையிலானவர்கள் 50 சதவீதம் தேர்வு செய்யப்படுகின்றனர்.

உலகம் முழுவதும் 30 வகையான பரிசோதனை நடைபெற்று வரும் நிலையில், கொரோனா வைரசை எதிர்க்கும் ஆன்டி பாடி அம்சங்கள் குறித்து தொடக்க ஆய்வுகள் உறுதி செய்துள்ளன.

அமெரிக்கா நோவாவாக்ஸ் நிறுவனத்துக்கு சுமார் ஒன்று புள்ளி 6 பில்லியன் டாலர் நிதியுதவியை அளித்து புத்தாண்டுக்குள் 100 மில்லியன் டோஸ்களை உற்பத்தி செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments