கன்னட திரையுலகினர் பலருக்கு போதைப் பொருள் விவகாரத்தில் தொடர்பு ?...

0 1234
கன்னட திரையுலகினர் பலருக்கு போதைப் பொருள் விவகாரத்தில் தொடர்பு ?...

கன்னட திரைப்பட உலகின் பல முன்னணி நட்சத்திரங்கள் போதைப் பொருள் விவகாரத்தில் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த மாதம் பெங்களூரில் சிக்கிய 3 போதைப் பொருள் கடத்தல்காரர்கள், தாங்கள் திரையுலகினருக்கு சப்ளை செய்வதற்காக அவற்றைக் கடத்தி வந்ததாக தெரிவித்தனர்.

திரைப்பட நட்சத்திரங்கள், பின்னணி பாடகர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் பலரும் போதைப் பொருளுக்கு அடிமையாகி இருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

முன்னணி நடிகையான ராகினி திவேதியை புதன்கிழமை விசாரணைக்கு வருமாறு போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர்.

தன்னால் ஆஜராக முடியவில்லை என்று விளக்கம் அளித்த ராகினி, விசாரணைக்கு வழக்கறிஞரை அனுப்பி வைத்திருந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments