செப்.7 முதல் தமிழகத்தில் கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கம் - தெற்கு ரயில்வே

0 2563
தமிழகத்தில் செப்டம்பர் 7-ம் தேதி முதல் மொத்தம் 9 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. நாடு முழுவதும் இயக்கப்படும் சிறப்பு ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்து இருந்தது.

அதன்படி, தமிழகத்தில் 5 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என கூறப்பட்ட நிலையில், அந்த எண்ணிக்கை  9 ஆக அதிகரித்துள்ளது.  சென்னை - கோவை இடையே 3 சேவைகளும், சென்னை - திருச்சி மற்றும் கோவை - மயிலாடுதுறை இடையிலும் தினசரி சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது.

அதேபோல் சென்னை - மதுரை இடையே 2 சேவைகளும், சென்னை - காரைக்குடி மற்றும் சென்னை - தூத்துக்குடி இடையேயும் தினசரி சிறப்பு ரயில்களும் இயக்கப்பட உள்ளதாக, தெற்கு ரயில்வேயின் இணைய பக்கத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments