எஸ்பிபி உடல் நிலை குறித்து திங்களன்று நல்ல செய்தி வரும் - எஸ்பிபி சரண்

0 2095

பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் உடல் நிலை சீராக உள்ளதாக MGM மருத்துவமனை தெரிவித்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ள எஸ்.பி. பாலசுப்பிரமணியம், சென்னை - அமைந்தகரையில் உள்ள MGM மருத்துவமனையின் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப் பட்டு உள்ளார். இந்நிலையில் மருத்துவமனை வெளியிட்ட மருத்துவ அறிக்கையில், எஸ்.பி. பாலசுப்பிர மணியம், சுய நினைவுடன் உள்ளதாகவும், அவரது உடல் நிலை சீராக இருப்பதாகவும் தெரிவிக்கப் பட்டு உள்ளது.

இதனிடையே, வரும் திங்கட்கிழமை நல்ல செய்தியை எதிர்பார்க்கலாம் என எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின்மகன்எஸ்.பி.பி. சரண் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments