உயர்ரக இருசக்கர வாகனங்களை திருடிய இருவர் கைது; 7 பைக்குகள் பறிமுதல்

0 1244
சென்னை புறநகரில் உயர்ரக பைக்குகளை திருடி மிக மிக குறைந்த விலைக்கு விற்று வந்த இருவரை கைது செய்த போலீஸார் 7 பைக்குகளை பறிமுதல் செய்தனர்.

சென்னை புறநகரில் உயர்ரக பைக்குகளை திருடி மிக மிக குறைந்த விலைக்கு விற்று வந்த இருவரை கைது செய்த போலீஸார் 7 பைக்குகளை பறிமுதல் செய்தனர்.

திருடுபோன டியூக் பைக் ஒன்றில் கிழக்குகடற்கரை சாலையில் வந்த இருவரை நீலாங்கரை போலீஸார் பிடித்து விசாரித்தனர்.

கோவிந்தன், மணிகண்டன் என்னும் இருவரும் புறநகர் பகுதிகளில் உயர்ரக பைக்குகளை திருடியதாகவும், அதனை சீசிங் வண்டி என்றும்  அதனால் ஆர்.சி புத்தகம் கிடையாது போலீஸும் பிடிக்காது என்று கூறியும் 1,60,000 மதிப்புள்ள ராயல் என்பீல்டு பைக்கை 25ஆயிரத்துக்கும், 1,70,000 மதிப்புள்ள டியூக் பைக்கை 30ஆயிரத்துக்கும், 20ஆயிரத்துக்கு 1,40,000 மதிப்புள்ள பல்சர் 220 பைக்கையும் கல்லூரி மாணவர்களுக்கு குறைந்த விலையில் விற்றதும் தெரிய வந்தது.

அவர்களிடமிருந்து 2 டியூக், 2 டியோ, 1 ராயல் என்பீல்டு, 1 பல்சர் டூ டொன்டி உள்ளிட்ட 7 பைக்குகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments