சீனாவுக்கு எதிராக உலக நாடுகள் ஒன்றுபட தொடங்கி உள்ளது-அமெரிக்கா

0 2215

அண்டை நாடுகளிடம் அத்துமீறுவதை சீனா நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது.

இந்தியாவில் சீன ஊடுருவல்கள் அதிகரித்துள்ள நிலையில், மாநாடு ஒன்றில் பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ, அண்டை நாடுகளை சீண்டுவது போன்ற தீவிர நடவடிக்கையில் சீனா ஈடுபட்டு வருவதாக குற்றஞ்சாட்டினார். சீனா-இந்தியா எல்லையில் அமைதி நிலை திரும்ப வேண்டும் என்று அமெரிக்க எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டுள்ள மைக் பாம்பியோ, திபெத் விவகாரத்தில் தலாய் லாமாவுடன் பேச்சுவாரத்தை நடத்த சீனாவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

சீனா நியாயமான, பரஸ்பர மற்றும் வெளிப்படையான வழியில் அண்டை நாடுகளுடன் போட்டிட மறுக்கிறது என்ற புரிதலை மையமாக கொண்டு அந்நாட்டுக்கு எதிராக உலகம் ஒன்றுபட தொடங்கி உள்ளதாக அவர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments