அரசு பஸ், இருசக்கர வாகனங்கள் மீது மோதி விபத்து... பஸ்சின் அடியில் சிக்கிய ஒரே குடுமபத்தை சேர்ந்த நான்கு பேர் உயிரிழப்பு

0 45322

ஈரோடு அருகே கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து இருசக்கரவாகனங்கள் மீது மோதிய விபத்தில் பேருந்தின் அடியில் சிக்கிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பலியாகினர்.

சிவகிரியிலிருந்து ஈரோடு நோக்கிச் சென்ற அரசுப்பேருந்து, லக்காபுரம் அருகே பிரேக் பிடிக்காமல் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் சாலையின் வலதுபுறம் திரும்பியதில் எதிரில் வந்த 2  இருசக்கரவாகனங்கள் மீது மோதியது. 

ஜே.சி.பி கொண்டு பஸ் அப்புறப்படுத்தப்பட்ட நிலையில் பேருந்துக்கு அடியில் மொடக்குறிச்சி குளூர் பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தின் 4 பேர் சடலமாக கிடந்தனர். அவர்கள் பஸ்சில் பயணித்த ஓட்டுநர் உள்பட மூவருக்கு காயம் ஏற்பட்டது.

கொரோனா ஊரடங்கை தொடர்ந்து நிறுத்திவைக்கப்பட்ட பேருந்துகள் 5 மாதங்களுக்கு பிறகு படிப்படியாக இயங்கத் தொடங்கிய நிலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments