லடாக்கில் ராணுவத் தளபதி...

0 5271
லடாக்கில் ராணுவத் தளபதி...

லடாக்கிற்கு சென்றுள்ள ராணுவத் தளபதி மனோஜ் முகுந்த் நரவானே, எல்லையில் படைகளின் ஆயத்த நிலை குறித்து ஆய்வு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கிழக்கு லடாக் எல்லையில், இயல்பு நிலை திரும்பச் செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் இந்தியா-சீனா ராணுவ அதிகாரிகள் இடையே ஒருபுறம் நடைபெற்றாலும், மற்றொருபுறம் அத்துமீறல் முயற்சிகளை சீனா கைவிடவில்லை.

பாங்காக்சோ ஏரியின் தென்கரையில் சீனாவின் அத்துமீறல் முயற்சி முறியடிக்கப்பட்ட நிலையில், கடந்த 3 நாட்களாக நடைபெற்ற இருதரப்பு ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை.

அதேசமயம், எல்லையில் இந்திய நிலைகள் வலுப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், லடாக் சென்றுள்ள ராணுவத் தளபதி எம்.எம்.நரவானே, படைகளின் ஆயத்தநிலை குறித்து 2 நாட்கள் ஆய்வு செய்ய உள்ளார்.

களத்தில் உள்ள படையணி மற்றும் படைப்பிரிவு தளபதிகள் ராணுவத் தலைமைத் தளபதியிடம் கட்டுப்பாட்டு எல்லைக்கோட்டில் உள்ள நிலவரம் குறித்து எடுத்துரைக்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments