மாநில அரசுகளுக்குத் தரவேண்டிய இழப்பீட்டைத் தர மத்திய அரசு மறுப்பது மிகப்பெரிய நம்பிக்கை துரோகம் - மம்தா பானர்ஜி

0 985
மாநில அரசுகளுக்குத் தரவேண்டிய இழப்பீட்டைத் தர மத்திய அரசு மறுப்பது மிகப்பெரிய நம்பிக்கை துரோகம் - மம்தா பானர்ஜி

மாநில அரசுகளுக்குத் தரவேண்டிய இழப்பீட்டைத் தர மத்திய அரசு மறுப்பது மிகப்பெரிய நம்பிக்கை துரோகம் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், நிதிச்சுமை காரணமாக அரசு ஊழியர்களுக்கு ஊதியம் தர முடியாமல் மாநில அரசுகள் சிரமப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உதவுவதற்கு பதிலாக அவர்கள் மீது கடனை சுமத்துவது நம்பிக்கை துரோகமாகும் என்று மம்தா தமது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இழப்பீட்டுக்கு ரிசர்வ் வங்கியிடமிருந்து கடன் வாங்கும்படி கடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய யோசனைக்கு பல்வேறு மாநில அரசுகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments