இந்தியா-சீனா எல்லைப் பிரச்சனைக்கு அமைதி தீர்வு காணும் -அமெரிக்கா நம்பிக்கை

0 1163
இந்தியா-சீனா எல்லைப் பிரச்சனைக்கு அமைதி தீர்வு காணும் -அமெரிக்கா நம்பிக்கை

இந்தியா சீனா எல்லைப் பிரச்சினைக்குச் சுமுகத் தீர்வு கிடைக்கும் என்று நம்புவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய போது எல்லையில் சீனா தனது அண்டை நாடுகளுடன் வம்பு வழக்கில் ஈடுபட்டு வருவதாக சாடினார்.

தைவான் ஜலசந்தி முதல் இமயமலை வரை மற்றும் அதற்கு அப்பாலும் சீன கம்யூனிஸ்ட் கட்சி தனது அண்டை நாடுகளை கொடுமைப்படுத்தும் பழக்கத்தில் ஈடுபட்டுள்ளது.

இது தென் சீனக் கடலிலும் தெளிவாகத் தெரிகிறது. இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகள் சீனாவை பின்னுக்குத் தள்ள அமெரிக்காவுடன் இணைகிறார்கள்.

சீனாவின் நியாயமற்ற நடைமுறைகளுக்கும் ஆக்கிரமிப்புக்கும் எதிராக முழு உலகமும் நிற்கிறது என்றும் மைக் பாம்பியோ தமது பேச்சில் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments