எஸ்பிபி உடல்நிலை மெல்ல மெல்ல தேறி வருகிறது- எஸ்பிபி சரண்

0 2265

பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் குணம் அடைந்து வருவதாக அவரது மகன் எஸ்.பி.பி.சரண், தெரிவித்துள்ளார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட எஸ்.பி. பாலசுப்பிரமணியம், கடந்த ஆகஸ்டு மாதம் 5 -ஆம் தேதி சென்னை - அமைந்தகரையில் உள்ள MGM மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது, எக்மோ மற்றும் வெண்டிலேட்டர் உதவியுடன் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்திற்கு, மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

எஸ்.பி. பாலசுப்பிரமணியம் உடல் நிலை குறித்து அவரது மகன் எஸ்.பி. பி சரண், வெளியிட்டு உள்ள தனது டுவிட்டர் பதிவில், உடல் நிலை சீராக உள்ளதாகவும், படிப்படியாக குணம் அடைந்து வருகிறார் என்றும் அறிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments