விமானத்திற்கு இணையாக ஜெட்பேக்கில் பறந்த நபர்..!

0 3987

லாஸ் ஏஞ்சலஸ் சர்வதேச விமான நிலையத்திற்கு மேலே 3 ஆயிரம் அடி உயரத்தில் விமானம் ஒன்றிற்கு மிக அருகே நபர் ஒருவர் ஜெட்பேக்-ல் பறந்து சென்ற சம்பவம் குறித்து FBI விசாரணை நடத்துகிறது.

தங்களது விமானத்திற்கு அருகே 30 அடி தூரத்தில் ஜெட்பேக் நபர் பறந்து சென்றதாக அமெரிக்கன் மற்றும் ஜெட்புளூ விமானிகள் விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர்.

இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சம்பவம் குறித்து அமெரிக்க விமானப் போக்குவரத்து நிர்வாகம், போலீசாருக்கு தகவல் அளித்தது. இது குறித்த விசாரணையை துவக்கி உள்ள FBI என்ன நடந்த து என்பதை விரைவில் கண்டுபிடித்து விடுவோம் என தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments