நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் கேள்வி நேரம் இடம்பெறாது - மாநிலங்களவை செயலகம்

0 727
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் கேள்வி நேரம் இடம்பெறாது - மாநிலங்களவை செயலகம்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் கேள்வி நேரம் இடம்பெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

14ம் தேதி முதல் அக்டோபர் 1 வரை  கூட்டத் தொடர் நடைபெற உள்ள நிலையில்,  மாநிலங்களவை செயலக அறிவிப்பில், கேள்வி நேரம் இடம்பெறாது எனவும், ஜீரோ ஹவர் மற்றும் பிற அலுவல்கள் மட்டும் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.

மக்களவை செயலக அறிவிப்பில், 14ம் தேதி மட்டும் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரையும், 15ம் தேதியில் இருந்து மதியம் 3 மணி முதல் இரவு 7 மணி வரையும் மக்களவை நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.

இதை உறுதி செய்துள்ள மத்திய அரசு வட்டாரங்கள், வார இறுதிநாள்கள் விடுமுறை இல்லாமல்  நாள்தோறும் இரு அவைகளும்  காலை, மதியம் என தலா 4 மணி நேரம் கூடும் எனத் தெரிவித்துள்ளன. கேள்வி நேரம் இடம்பெறாது என்பதற்கு எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments